கொழும்பில் பேருந்து சாரதியின் மோசமான செயலால் பரிதாபமாக உயிரிழந்த நபர்
கெஸ்பேவ - கொழும்பு வீதியில் தனியார் பேருந்தின் ஓட்டுநர், போதையில் பேருந்தை ஓட்டிச் சென்றமையினால் பேருந்தில் ஏற முயற்சித்தவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
திவுல்பிட்டிய சந்தியில் பிலியந்தலை நோக்கிச் செல்லும் பேருந்தில் பயணி ஏற முயன்ற போது பேருந்து திடீரென இயங்கியதால் பயணி கீழே விழுந்துள்ளார்.
இந்த நிலையில் பேருந்து ஓட்டுநர் பொரலஸ்கமுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். இந்த விபத்தில் பொரலஸ்கமுவ, திவுல்பிட்டியவை சேர்ந்த 75 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சாரதியின் செயல்
பிலியந்தலை நகரத்திற்கு செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த நபர் கொழும்பிலிருந்து கெஸ்பேவ செல்லும் பேருந்தில் முன் கதவு வழியாக ஏறுவதற்கு முன்பு ஓட்டுநர் பேருந்தை சாரதி ஓட்டியுள்ளார்.
இதனால் கீழே விழுந்து காயமடைந்த நபர் சிகிச்சைக்காக கொழும்பு தெற்கு போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவரது நிலை மோசமாக இருந்ததால் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
ஆனால் அவர் அங்கு உயிரிழந்துள்ளார். பேருந்து ஓட்டுநர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும் அந்த நேரத்தில் போதைப்பொருளைப் பயன்படுத்தியுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருள்
கொழும்பு-கெஸ்பேவ தனியார் பேருந்து ஓட்டுநர்கள் பலர் போதைப்பொருள் பயன்படுத்திக் கொண்டு கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதால் தங்கள் உயிர்களையும் கைகால்களையும் இழந்துள்ளனர்.
மேலும் பல சந்தர்ப்பங்களில் உயிருக்கு ஆபத்தான காயங்களுக்கு உள்ளதாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





ஈஸ்வரி குறித்து கொற்றவையிடம் தர்ஷினி கூறிய உண்மை, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam

கனடா நிலப்பரப்புக்கு அடியில் உறங்கிக்கொண்டிருக்கும் பயங்கர அபாயம்: எச்சரிக்கும் ஆய்வாளர்கள் News Lankasri

நடிகர் சூர்யாவின் பிள்ளைகள் தனது Pocket-Money-யை என்ன செய்கிறார்கள்? சித்தப்பா கார்த்தி கூறிய உண்மை Manithan

வெளிவந்த மனோகரின் சதி, அப்பாவை தள்ளிவிட்ட கொதித்தெழுந்த நிலா, தரமான சம்பவம்.. அய்யனார் துணை பரபரப்பு எபிசோட் Cineulagam
