சங்கு கூட்டணியின் ஆதரவை பெற பேச்சு நடத்தும் கட்சிகள்
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைக்க ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஆதரவைப் பெறுவதற்காக இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவை ஆகியவை அக்கட்சியுடன் பேச்சுகளில் ஈடுபட்டுள்ளன.
பல சபைகளில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஆதரவைப் பெறும் கட்சிகளே ஆட்சி அமைக்கக்கூடிய சூழ்நிலை காணப்படுவதனால், அக்கட்சியின் ஆதரவைப் பெறுவதற்காக இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் தமிழ்த் தேசியப் பேரவை ஆகியவை கடந்த இரு தினங்களாகப் பேச்சுக்களில் ஈடுபட்டு வருகின்றன.
இது தொடர்பில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் இணைத் தலைவர்களில் ஒருவரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் கூறுகையில்,
"உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பதற்குத் தமக்கு ஆதரவு தருமாறு பல்வேறு தரப்பினரும் எம்முடன் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ் மக்களின் ஆணை
எமது கூட்டணியில் உள்ள ஏனைய தரப்பினருடனும் கலந்துரையாடி தமிழ் மக்கள் வழங்கிய ஆணையை மலினப்படுத்தாத தரப்பினருக்கு ஆதரவு வழங்குவோம்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள் Manithan
மீண்டும் சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த பாண்டவர் இல்லம் சீரியல் வேதநாயகி... எந்த தொடர்? Cineulagam
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan