இனத்தின் விடுதலைக்காக சொந்த அண்ணனையே பறிகொடுத்தேன்: சின்னராசா லோகேஸ்வரன்
இனத்தின் விடுதலைக்காக சொந்த அண்ணனையே பறிகொடுத்துள்ளதாக தமிழரசு கட்சி உறுப்பினரும் தற்போது பிரதேச சபைக்கு தெரிவாகியுள்ளவருமான சின்னராசா லோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு ஊடக அமையத்தில் தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பில் இன்று (9) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இனத்தின் விடுதலை
அவர் மேலும் தெரிவிக்கையில், எனக்கு எதிராக விரல் நீட்டுகின்ற எவருக்கும் தமிழ்த் தேசியத்தை பற்றி பேசுவதற்கு அருகதை கிடையாது.
எம்மை அழிக்கும் நோக்கத்தை விடுத்து இனத்தின் விடுதலைக்காக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
அத்தோடு, புலம்பெயர்ந்தவர்கள் தமிழரசுக்கட்சியை அழிப்பதற்கான நோக்கத்தை விடுத்து அதனை வளர்ப்பதற்கான நடவடி்க்கையினை மேற்கொள்ளுங்கள் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மணிவிழாவிற்கு மாலையுடன் உட்கார்ந்த குணசேகரனுக்கு விழுந்த பெரிய இடி.. கெத்து காட்டிய ஜனனி, எதிர்நீச்சல் சீரியல் Cineulagam
