பொலிஸாருக்கு அதிர்ச்சி கொடுத்த கிளி - சிக்கிய பெருந்தொகை தங்க நகை
காலி(Galle), கரந்தெனிய பிரதேசத்தில் வீட்டில் வளர்க்கப்பட்ட கிளி உரிமையாளரை காட்டிக்கொடுத்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
கிளியின் நடத்தையை ஆராய்ந்ததன் மூலம், தங்க நகைகளை திருடிய 38 வயது கர்ப்பிணிப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுமார் நான்கரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள தங்க நகைகள் திருடப்பட்ட இரண்டு முறைப்பாடுகள் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தங்க நகை
சந்தேக நபரான பெண்ணின் கணவர் கறுவா வெட்டச் சென்றிருந்தபோது, வீட்டின் அலமாரியில் இருந்த பணம் மற்றும் தங்க நகைகளை யாரோ திருடிச் சென்றதாக அந்தப் பெண் தனது கணவருக்கு தொலைபேசியில் தகவல் அளித்துள்ளார்.
அதற்கமைய கணவர் கரந்தெனிய பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டிற்கமைய பொலிஸார் நடத்திய விசாரணையில், வீட்டில் இருந்த செல்லப் பிராணியான கிளி, திருட்டு நடந்த அறையின் வாசற்படியில் தங்கிப் பழகியிருப்பது கண்டறியப்பட்டது.
பெண் கைது
அந்த இடத்தில் தினமும் தங்கும் கிளி அங்கே இருப்பதாலும், வெளியாட்கள் உள்ளே நுழைய முடியாததாலும், இந்தத் திருட்டு குடியிருப்பாளரால் செய்யப்பட்டிருக்கலாம் எனவும், பொலிஸாரை தவறாக வழிநடத்த இது பயன்படுத்தப்படுவதாகவும் ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.
பணம் வைக்கப்பட்டிருந்த அலமாரியில் மிளகாய் தூள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், சமையலறையில் இருந்த மிளகாய் தூளுடன் அலமாரியில் இருந்த மிளகாய் தூளை ஒப்பிட்டுப் பார்த்தபோது, இரண்டு வகையான மிளகாய் தூள்களும் ஒரே மாதிரியானவை என அடையாளம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
திருட்டு நடந்த நேரத்தில் சந்தேக நபரான பெண்ணும் அவரது சிறுவயது மகனும் மட்டுமே வீட்டில் தங்கியிருந்தனர். எனவே, சந்தேகத்தின் அடிப்படையில், திருட்டு தொடர்பாக பெண்ணிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
மேலும், திருட்டு செய்ததாக அவர் ஒப்புக்கொள்ளாததால், அம்பலாங்கொடை பொலிஸ் நிலைய மோப்ப நாய் பிரிவிலிருந்து ஒரு நாயின் உதவியையும் பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதற்கமைய, திருட்டு நடந்த வீட்டின் அலமாரியை பொலிஸ் நாய் இரண்டு முறை மோப்பம் பிடித்த பிறகு, அவர் தான் திருட்டைச் செய்ததாக ஒப்புக்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ட்ரம்ப் முன்வைத்த ஒப்பந்தத்துக்கு சம்மதித்தார் உக்ரைன் ஜனாதிபதி: விரைவில் கையெழுத்தாகலாம் News Lankasri
