சென்னை வந்தடைந்த தோனியின் T-shirtஇல் எழுதப்பட்டிருந்த விடயம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்
ஐபிஎல்(IPL 2025) போட்டிகளில் விளையாடுவதற்காக சென்னை சுப்பர் கிங்ஸ்(CSK) அணியின் வீரர் மகேந்திர சிங் தோனி(DHONI) இன்று(26) சென்னை வந்தடைந்துள்ளார்.
அப்போது அவர் அணிந்திருந்த உடை (T-shirt) தற்போது பேசுபொருளாகியுள்ளது.
அதில், புள்ளிகள் போன்ற அடையாளங்கள் அச்சிடப்பட்டிருந்தன.
தோனியின் இறுதி ஐபிஎல்
இந்த நிலையில், அவை 'Morse Code’ வகை எழுத்துகள் என்பதும், குறியீடாக பொருள் உணர்த்தும் வாசகம் என்பதும் தெரிய வந்துள்ளது.
இந்த வாசகம் One Last Time என்ற பொருளை உணர்த்துவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்மூலம், நடப்பு ஐபிஎல் தொடர் தோனியின் இறுதி ஐபிஎல் தொடராக இருக்கலாம் என்று இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஐபிஎல் 2025
இதேவேளை ஐபிஎல் தொடர் பயிற்சிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த பல வீரர்கள் சென்னை வந்தடைந்துள்ளனர்.
ஐபிஎல் 2025 மார்ச் மாதம் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கெஹெல்பத்தர பத்மேவின் நண்பர் மீது துப்பாக்கிச் சூடு! மினுவாங்கொடை சம்பவம் தொடர்பில் வெளிவரும் தகவல்கள்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

5 நாள் முடிவில் வெற்றிப்பெற்றுள்ள டிராகன் திரைப்படம் செய்த வசூல்... தமிழகத்தில் மட்டுமே இவ்வளவா? Cineulagam

எலான் மஸ்க்கின் கனேடிய குடியுரிமைக்கு ஆபத்து? 2.5 லட்சம் கனேடியர்கள் மனுவில் கையெழுத்து News Lankasri
