பெண் நீதிபதி மீது விசாரணை செய்யுமாறு நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு (Video)
அத்தனகல்ல நீதிமன்றம்
கடந்த மே 9ஆம் திகதியன்று நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் நிட்டம்புவ, அத்தனகல நீதிமன்றம் உரியவகையில் விசாரணைகளை முன்னெடுக்கவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்றில் இன்று இந்த குற்றச்சாட்டை, ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் சுமத்தனர். குறித்த நீதிமன்றின் பெண் நீதிவான், மனுதாரர்களுக்கு எதிராக நடந்துக்கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றம் சுமத்தினர்.
அத்துடன், மனுதாரர் தரப்பில் சாட்சியளிக்க வந்தவர்களிடம் கடுமையாக நடந்துக்கொள்வதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இரவு 9 மணிவரை அடையாள அணிவகுப்பு
இரவு 9 மணியளவிலேயே கொலை தொடர்பில் அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
எனவே அந்த நீதிமன்றத்தின் ஊடாக அமரகீர்த்தி அத்துகோரளயின் மரணம் தொடர்பில் நியாயத்தை எதிர்பார்க்கமுடியாது என்றும் அவர்கள் கூறினர்.
இந்தநிலையில் குறித்த நீதிமன்ற நீதிவான், நாடாளுமன்ற சிறப்புரிமை குழுவுக்கு அழைக்கப்பட்டு விசாரணை செய்யப்படவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.