கர்தினாலை சந்திக்கும் வாய்ப்புக்காக காத்திருக்கும் அரசாங்க அமைச்சர்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்காக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்தை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக அரசாங்கத்தின் பிரதம அமைப்பாளரும் பொது பாதுகாப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஏதேனும் சந்தேகங்கள் நிவர்த்தி செய்யப்படும் வகையில், அவரையும், ஏனைய ஆயர்களையும், அருட் தந்தையர்களையும் சந்தித்து கலந்துரையாடுவதற்கு தாம் தயார் என்பதை கர்தினாலுக்கு எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளதாக அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்காகவே இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக பொய்யான குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவதாகவும், இது நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
உளவுத்துறை அதிகாரிகள் மீது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறிய குற்றச்சாட்டுகள் குறித்து அரசாங்கம் கவலையடைவதாகவும் அவர் குறிப்பிட்டார்



