சபாநாயகருக்கு எதிராக விரைவில் நம்பிக்கையில்லாப் பிரேரணை..!
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக விரைவில் நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை முன்வைக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு பிரதியமைச்சருக்கு எதிராக எதிர்க்கட்சி தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்கு முரணானது என்று தெரிவித்து சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன அண்மையில் நிராகரித்திருந்தார்.
நம்பிக்கையில்லாப் பிரேரணை
எனினும் குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்கொண்டு செல்லத்தக்கது என்று சட்டமா அதிபரும் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் அலுவலகமும் சிபாரிசு செய்திருந்ததாக குறிப்பிட்ட அஜித் பெரேரா எம்.பி, அதற்கான ஆவணங்களையும் நாடாளுமன்றத்தின் நேற்றைய அமர்வில் சமர்ப்பித்தார்.
அதன் மூலம் சபாநாயகர் பக்கச்சார்பாக நடந்து கொண்டுள்ளமை தெளிவாகியுள்ளதன் காரணமாக அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை விரைவில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தான் முன்னரே குறிப்பிட்டது போன்று சபாநாயகர் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்வதாகவும் அஜித் பெரேரா எம்.பி தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.



