சிங்கள மக்களை திருப்திப்படுத்தும் அநுர அரசு..!
தேர்தல் நேரங்களில் பல வாக்குறுதிகளை அளித்திருந்தார்கள், ஆனால் இன்றுவரை தமிழர் பிரச்சினைகளில் எந்தவிதமான முன்னேற்றமான நடைமுறையும் இடம்பெற்றதாக தெரியவில்லை என்று அரசியல் செயற்பாட்டாளர் கு .செந்தூரன் தெரிவித்தார்.
லங்காசிறிக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
தமிழர் தாயகங்களில் பெரும் விவசாய நிலங்களாக இருந்த இடங்கள் முன்னைய அரசாங்கங்களாலும் கையகப்படுத்தப்பட்டுள்ளது, இன்றைய அரசாங்கத்திலும் கையகப்படுத்தப்பட்டு கொண்டிருக்கின்றது.
தமிழர் பிரச்சினைக்கான தீர்வு என்பதை எதிர்த்தது ஜேவிபி கட்சியினர் தான்.
தற்போது பசுத்தோலை போர்த்தியது போன்று இருந்தாலும் அவர்கள் தங்களுடைய பழைய கொள்கைகளை கைவிட்டதை போன்று தெரியவில்லை.
தமிழர் பகுதிகளில் பல இடங்களில் நிலஆக்கிரமிப்பு இடம்பெறுகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.



