ஐஸ்-போதைப் பொருள் தொடர்பில் மௌனம் காக்கும் எதிர்க்கட்சியினர்! சந்தேகம் வெளியிட்ட பிமல் ரத்நாயக்க
நாட்டில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்படும் ஐஸ், போதைப் பொருள் தொடர்பில் எதிர்க்கட்சியில் உள்ள பிரதான தலைவர்கள் எவ்வித கேள்விகளும் எழுப்புவதில்லை என்பதில் பெரும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றையதினம்(25) உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பெருமளவு போதை பொருட்கள்
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
நாடாளுமன்றில் பந்தி பந்தியாக எழுதி வைத்து கொண்டு கேள்விகளை கேட்கும் எதிர்க்கட்சிகள் இது தொடர்பில் கரிசனை கொள்ளவதுமில்லை கேள்வியும் கேட்பதுமில்லை.
எமது அரசாங்கத்தில் பெருமளவு போதை பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அதெல்லாம் ஊடக கண்காட்சியல்ல.இவற்றுக்கு நாம் ஊடக கண்காட்சிகள் செய்தால் ஹொலிவுட்டில் இருந்து தான் ஆட்கள் கொண்டுவர வேண்டும்.
சொல்வதை செய்யும் அரசாங்கம்
நாங்கள் ஊடக கண்காட்சி நடத்துவதில்லை. அவ்வாறான மனநிலை பிரச்சினை எங்களுக்கு இல்லை.நாங்கள் சொல்வதை செய்யும் அரசாங்கம்.இவர்கள் முயற்சிக்கிறார்கள் அரசாங்கம் ஒன்றும் செய்வதில்லையென்று.
நாங்கள் உங்களுக்கு சொல்வதென்றால் குடுக்கு அடிமையாக வேண்டாம்.ஏன் நாமல் ராஜபக்சவுக்கு சொல்ல முடியாதா மனம்பேரி தங்களுக்கு தொடர்பில்லையென என்றார்.இவர்கள் இப்போது சொல்லுகிறார்கள் அரச ஏகாதிபத்தியவாதம் என்று.
எங்கள் அரசில் பல கட்சிகள் இணைந்துள்ளன.ஜனநாயகத்தின் ஒரு வார்த்தை கூட அறியாதவர்கள் எமக்கு ஜனநாயகம் கற்பிக்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.



