தாளையடி கடற்கரைக்கு செல்வோருக்கு வெளியான எச்சரிக்கை
வடமராட்சி, கிழக்கு தாளையடி கடற்பகுதிக்கு வரும் சுற்றுலாவாசிகள் கடலுக்குள் இறங்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வடமராட்சி கிழக்கு தாளையடி கடற்கரை பகுதிக்கு அதிகளவான சுற்றுலாவாசிகள் நாளாந்தம் வருகை தந்து பொழுதை கழிப்பதுடன்,அதில் சிலர் கடல் விளையாட்டுக்களிலும் ஈடுபடுகின்றார்கள்.
தற்போது குறித்த கடற்பகுதிகளில் அதிகளவான காற்று வீசுவதால் கடல் கொந்தளிப்பான நிலையில் காணப்படுகிறது.
அறிவுறுத்தல்
ஆகவே தாளையடி கடற்கரைக்கு வரும் சுற்றுலாவாசிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு யாரும் கடற்கரைக்குள் இறங்க வேண்டாம் என அப்பகுதி கடற்றொழிலாளர்களால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு தாளையடி கடற்கரைக்கு வருகை தந்த சுற்றுலாவாசி ஒருவர் கடலில் நீராடும் போது உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



