இலங்கை மத்திய வங்கியில் தற்போதுள்ள அமெரிக்க டொலர் எவ்வளவு? ரணில் தகவல்
மத்திய வங்கி கடந்த வெள்ளிக்கிழமையன்று சர்வதேச நாணய நிதியத்துக்கு அனுப்பியுள்ள அறிக்கையை நாடாளுமன்றத்துக்கு பெற்று தரவேண்டும் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்தார்.
தமக்கு கிடைத்த தகவலின்படி, ஒரு லட்சத்து 50ஆயிரத்து பில்லியன் டொலர்கள் மாத்திரமே கடந்த வெள்ளிக்கிழமையன்று மத்திய வங்கியில் வெளிநாட்டு நாணய ஒதுக்கமாக இருந்தது.
அதில் ”தங்க” ஒதுக்கமாக 300 பில்லியன் டொலர்கள் உள்ள நிலையில் ஒரு லட்சத்து 20ஆயிரம் பில்லியன் டொலர்கள் மாத்திரமே நாணய ஒதுக்கமாக இருப்பதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு நாணய ஒதுக்கப் பற்றாக்குறைக்கு மத்தியில் மின்சார விநியோகத்தில் பிரச்சனை ஏற்பட ஏது இருப்பதாக ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார்.
எனினும் ஆளும் கட்சியினர் மத்திய வங்கியில் இருந்து குறித்த அறிக்கையை பெற்று தருவது தொடர்பில் உரிய பதில்களை வழங்கவில்லை.
அத்துடன் டொலர் பற்றாக்குறை உள்ளபோதும், உலை எண்ணெய் போதுமான அளவு இருப்பதால் மின்சார விநியோகத்தில் பிரச்சனை ஏற்படாது என்று மின்சாரத்துறை அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்

