உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளை குழப்ப முயற்சிக்கும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள்!
உயிர்த்த ஞாயிறு விசாரணைகள் இறுதிக்கட்டத்தை எட்டுகின்ற நேரத்திலே அதனை குழப்புகின்ற ஏற்பாடுகளை இப்போது எதிர்க்கட்சி சார்ந்த அரசியல்வாதிகள் செய்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்.
அத்தோடு, ராஜபக்சக்கள், விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றவர்கள் இன்று அதனை ஒடுக்குவதற்காகவும் அந்த விசாரணைகளை குழப்பும் விதமான செயல்பாடுகளை இப்போது அவர்கள் முன்னெடுத்துக் கொண்டு வருகின்றார்கள் எனவும் கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் ,சிறைச்சாலைகளிலே இவர்கள் குறிப்பிடும் விதமான எந்த ஒரு நடவடிக்கையும் அங்கே இல்லை. சரியான முறையில் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது.
விசாரணை
அரசியல்வாதிகள் மாத்திரம் சில வரப்பிரசாதங்களைக் கேட்டு அங்கே உண்ணாவிரதம் இருப்பதும், தங்களுக்கு வசதிகள் ஏற்படுத்தித் தருமாறும் கோரிக்கை வைக்கின்றார்கள். ஆனால் இங்கே யாருக்கும் விசேடமான எந்த ஒரு வசதியும் வழங்கப்பட மாட்டாது.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிச்சயமாக இந்த உயிர் நீத்தவர்களுக்கு நீதியினைப் பெற்றுக் கொடுக்கும்,
விசாரணை மிகவும் துரிதமாக இடம்பெற்றுக் கொண்டு வருகின்றது. மிக நீண்ட காலமாக இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டு வந்திருந்தது. இருந்தாலும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்த நாட்டைப் பொறுப்பேற்றதன் பின்னர் இந்த விசாரணை நேர்மையாகவும் நீதியாகவும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது எனத் தெரிவித்தார்.
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri