வீழ்ந்து நொறுங்கிய பாகிஸ்தான் உலங்கு வானூர்தி: பயணித்த அனைவரும் பலி
பாகிஸ்தான் நிர்வாகத்திற்குட்பட்ட காஷ்மீரின் தலைநகரான முசாஃபராபாத் அருகே பாகிஸ்தான் இராணுவ உலகுவானூர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த இராணுவ வீரர்கள் அனைவரும் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு இராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் இராணுவத்தின் ஊடகப் பிரிவான ISPR வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இராணுவ விமானப்படைக்கு சொந்தமான 'Mi-17' ரக உலகுவானூர்தி ஒன்று, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தரையிறங்க முற்பட்டபோதோ அல்லது புறப்பட்டபோதோ இந்த விபத்து நேரிட்டுள்ளது.
அமெரிக்கா - ஈரான் இடையே தீவிரமடையும் மோதல்: பரஸ்பர தாக்குதல்களுக்குப் பின்னர் ட்ரம்பும் ஈரானும் புதிய எச்சரிக்கை
அனைவரும் பலி
விபத்தில் உயிரிழந்தவர்களின் துல்லியமான எண்ணிக்கை இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், உலகுவானூர்தியில் இருந்த அனைவரும் வீரமரணம் அடைந்துவிட்டதாகவும், எவரும் உயிர் பிழைக்கவில்லை என்றும் இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.
An Army Aviation Mi-17 helicopter crashed near Muzaffarabad. The incident happened during takeoff due to a reported technical fault. All the personnel on board including two helicopter pilots lost their lives in the crash.Rescue teams reached the crash site after the incident. pic.twitter.com/VinvX1WR5Q
— Jawad Yousafzai (@JawadYousufxai) June 10, 2026
விபத்து நடந்த இடத்திற்கு மீட்புக் குழுவினர் உடனடியாக விரைந்துள்ளனர். விபத்துக்கான துல்லியமான தொழில்நுட்பக் காரணத்தைக் கண்டறிய உயர்மட்ட விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தரப்பு தெரிவித்துள்ளது.
பயங்கரவாத ஒழிப்புச் சட்டங்களின் கீழ் உள்ளூர் அரசாங்கம் சில அமைப்புகளுக்குத் தடை விதித்ததை அடுத்து, முசாஃபராபாத் பகுதியில் கடந்த சில நாட்களாகவே கடுமையான போராட்டங்களும், பதற்றமான சூழலும் நிலவி வருகின்றன.
இதன் காரணமாக அப்பகுதியில் பலத்த பாதுகாப்புப் போடப்பட்டிருந்த சூழலில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri