இஸ்ரேலிய இராணுவ வீரரின் துப்பாக்கிச் சூட்டில் 7 மாதக் கைக்குழந்தை பலி
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையின் ஹெப்ரான் நகரில், பாலஸ்தீனக் குடும்பம் ஒன்று சென்ற கார் மீது இஸ்ரேலிய இராணுவ வீரர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், 7 மாதக் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
இது தொடர்பான அதிர்ச்சியூட்டும் காணொளி காட்சிகள் தற்பொழுது வெளியாகியுள்ளன. சம்பவத்தன்று அக்குடும்பத்தின் காரை நோக்கி இஸ்ரேலிய இராணுவ வீரர் திடீரென துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
தீவிர விசாரணை
இதில் 'சாம் அபு ஹைக்கல்' என்ற 7 மாதக் குழந்தையின் தலையில் தோட்டா பாய்ந்து, அக்குழந்தை சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தது.

இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாகப் பரவலான கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில், இத்தாக்குதல் குறித்து தாங்கள் தீவிர விசாரணை நடத்தி வருவதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
பாலஸ்தீனப் பகுதிகளில் அப்பாவிப் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் மீதான இஸ்ரேலிய இராணுவத்தின் இத்தகைய தாக்குதல்கள் சர்வதேச சமூகத்தினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன.
அமெரிக்கா - ஈரான் இடையே தீவிரமடையும் மோதல்: பரஸ்பர தாக்குதல்களுக்குப் பின்னர் ட்ரம்பும் ஈரானும் புதிய எச்சரிக்கை