மாவீரர் துயிலும் இல்லங்களில் சப்பாத்துக் கால்களுடன் குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தினர்: நாடாளுமன்றத்தில் மகிந்தவிடம் பகிரங்க கேள்வி
தமிழர்கள் வாழ்ந்த பிரதேசங்களில் போரின் போது உயிர்நீத்தவர்களை நினைவுக்கூர மறுக்கப்படுவது குறித்து நாடாளுமன்றத்தில் இன்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இது தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் கேள்வி எழுப்பினார்.
மாவீரர் துயிலுமில்லங்களில் இராணுவ உறுப்பினர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் அவர்கள் தமது சப்பாத்து கால்களுடன் துயிலுமில்லங்களில் நடக்கின்றனர். இதனை ஏற்றுக்கொள்ளமுடியாது.
”சிங்கள இராணுவ உறுப்பினர் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடம் ஒன்றில் தமிழ் இராணுவ உறுப்பினர் ஒருவர் சப்பாத்து கால்களுடன் சென்றால் அதனை கண்டு உங்கள் மனம் எந்தளவு புண்படும்” என்று சிறீதரன் இதன்போது கேள்வி எழுப்பினார்.
”இறந்து போனவர்களின் ஆத்மாக்களின் மீது சப்பாத்து கால்களுடன் செல்வது நிறுத்தப்படும் வரை இந்த நாட்டில் அமைதியும் சமாதானமும் ஏற்படப்போவதில்லை” என்றும் சிறீதரன் குறிப்பிட்டார்.





தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam

கங்குவா படத்திற்கு பின் சிறுத்தை சிவா இந்த ஹீரோவைத்தான் இயக்கப்போகிறாரா.. லேட்டஸ்ட் தகவல் Cineulagam

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri
