தமிழர்களின் குடிப்பரம்பலை மாற்றியமைக்கவா நிதியுதவிகள்? சர்வதேச நிறுவனங்களிடம் கேள்வி (Video)
வவுனியா வடக்கின் வெடிவைத்தகுளம் பகுதிகளில் மக்கள் மீளக்குடியமர்த்தப்படவில்லை.
எனினும் புதிதாக சிங்கள மக்கள் குடியமர்த்தப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தப் பிரதேசத்தின் பெரியக்கட்டிக்குளம் பகுதியில் இருந்த கச்சல்சம்பளங்குளம் என்ற கிராமத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்டு “சப்புல்தென்ன“ என்ற சிங்கள கிராமம் அமைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் இன்று நாடாளுமன்றில் சுட்டிக்காட்டினார்.
இந்தநிலையில் இலங்கைக்கு நிதியுதவிகளை வழங்குகின்றபோது அது தமிழர்களின் குடிப்பரம்பலை மாற்றியமைப்பதற்காகவா வழங்கப்படுகிறது என்று இலங்கைக்கு உலக வங்கி உட்பட்ட உதவு நிறுவனங்களிடம் தாம் வினவுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்திய விமானியின் மனைவி வெளிப்படுத்திய தைரியம்: அக்கம் பக்கத்தினர் ஆச்சரியமடைந்த விடயம் News Lankasri
Bigg Boss 10: முதல் குறும்படத்தை போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! அதிரடி காட்டிய விஜய்சேதுபதி Manithan