சீர்திருத்தம் என்ற போர்வையில் தேர்தலை ஒத்திவைக்க நடவடிக்கை: எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
ஆளும்கட்சியின் இணைக்கட்சிகள் ஒருமித்த கருத்துக்கு வந்திருந்த போதிலும், நாடாளுமன்ற தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான உத்தேச திருத்தத்தை எதிர்க்கட்சிகள் நிராகரித்துள்ளன.
இதனையடுத்து பிரதமர் தினேஸ் குணவர்தனவினால் அழைப்பு விடுக்கப்பட்ட தேர்தல் சீர்திருத்தக்கூட்டம் இறுதி முடிவு எடுக்கப்படாமல் முடிவடைந்தது.
ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ் முற்போக்குக் கூட்டணி மற்றும் றிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியவை கலந்து கொண்டன, இருப்பினும் எதிர்க்கட்சித் தலைவர் கூட்டத்தைப் புறக்கணிப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.
சீர்திருத்தங்கள்
டலஸ் அழகப்பெரும குழுவினரும் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார பொன்னம்பலமும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

இந்தநிலையில் அனைத்து எதிர்க்கட்சிகளும் இன்றைய கூட்டத்தின் போது தம்மை எதிர்ப்பை தெரிவித்ததாக தமிழ் மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
அதேநேரம் சீர்திருத்தங்கள் என்ற போர்வையில் தேர்தலை ஒத்திவைக்கும் நடவடிக்கையை தனது குழு எதிர்ப்பதாக டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
இதேவேளை இரண்டு வாரங்களுக்குள் மீண்டும் அரசியல் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
குணசேகரன் ஜாமினுக்கு வந்த சிக்கல், செக் வைத்தது யார் தெரியுமா?... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam