யாழ்.மறைமாவட்டத்தின் புதிய ஆயரை அறிவித்தது வத்திக்கான்
யாழ்ப்பாண மறைமாவட்ட புதிய ஆயராக ஆயர் அன்ரன் ரஞ்சித் ஆண்டகை (Anton Ranjith) வத்திக்கானால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் கொழும்பு உயர் மறைமாவட்டத்தின் துணை ஆயராகவும், மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் அப்போஸ்தலிக்க பரிபாலகராகவும் பணியாற்றியுள்ளார்.
திருத்தந்தை லியோ
1966ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பிறந்த இவர் 2000ஆம் ஆண்டு கொழும்பு மறைமாவட்ட குருவாக திருநிலைப்படுத்தப்பட்டு பல இடங்களிலும் சமய, கல்வி மற்றும் நிர்வாகப்பணியாற்றியுள்ளார்.
உரோமில் இறையியல் பட்டத்தையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் இளங்கலைப் பட்டத்தையும் ஐக்கிய இராச்சியத்தில் கல்வியியலில் முதுகலைப் பட்டத்தையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முதுகலைமானி பட்டத்தையும் பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து ஜூலை 2020இல் திருத்தந்தை பிரான்சிஸால் கொழும்பு மறைமாவட்டத்தின் துணை ஆயராக நியமிக்கப்பட்டார்.

மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயரின் ஓய்வுக்குப் பின்னர் அங்கு அப்போஸ்தலிக்க பரிபாலகராகவும் பொறுப்பேற்றார்.
கொழும்பு இறையியல் கல்லூரியில் தமிழ் பிரிவுக்கு பொறுப்பாளராகவும், கொழும்பிலுள்ள பிரபல கல்லூரிகளில் (சென். பீற்றர்ஸ், சென். ஜோசப், சென். செபஸ்டியன்) ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
இலங்கையில் தேசிய கத்தோலிக்க இளைஞர் ஆணைக்குழுவின் பொறுப்பாளராகவும் செயல்பட்டு வந்துள்ளார்.
இந்த சூழ்நிலையில் திருத்தந்தை 14ஆம் லியோவினால் யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயராக தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.
யாழ் மறைமாவட்டத்தின் இணை பேராலய ஆலயத்தின் மணி ஒலிக்கப்பட்டு உத்தியோகபூர்வமாக இந்த அறிவிப்பு வெளியானமை குறிப்பிடத்தக்கது.
விசேட வைத்திய நிபுணர்கள் கட்டணங்களில் ஏற்பட்டுள்ள பாரிய அதிகரிப்பு! வைத்திய நிபுணர் முன்வைக்கும் குற்றச்சாட்டு
YOU MAY LIKE THIS VIDEO
ஐரோப்பாவில் ரத்தான நூற்றுக்கணக்கான விமானங்கள்... வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட குடும்பங்கள் News Lankasri
அந்த வலியும், வேதனையும்.. காதல் முறிவு மற்றும் காதலரால் செய்யப்பட்ட துன்புறுத்தல்களை கூறிய நடிகை அனுபமா Cineulagam