திலீபனின் சிலை அகற்றப்பட்டமைக்கு எதிராக மட்டக்களப்பில் பாரிய போராட்டம்
யாழ். நல்லூர் பகுதியில் வைக்கப்பட்டிருந்த தியாக தீபம் திலீபனின் உருவச் சிலை அகற்றப்பட்டமையைக் கண்டித்து மட்டக்களப்பில் பாரிய போராட்டம் ஒன்று இன்று(28.09.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில், காந்தி பூங்கா வளாகத்தில் இந்த கவனயீர்ப்புப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நினைவேந்தல் உரிமை
திலீபனின் உருவச் சிலை அகற்றப்பட்டமையைக் கண்டித்தும், பொலிஸாரின் செயலைக் கண்டித்தும், தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தியும் இந்த கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர்களான, சிறீநேசன், ஸ்ரீநாத் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கப் பிரதிநிதிகள், பொதுமக்கள், சிவில் செயற்பாட்டாளர்கள் மற்றும் மதகுருமார்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.










மேலதிக தகவல் - பவன்
இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட ஈரான் உச்சத் தலைவர் மொஜ்தபா கமேனி - நிபுணர் குழு உறுப்பினர் வெளியிட்ட தகவல் News Lankasri
ஜெயிலர் 2 பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற இத்தனை கோடி வசூல் வேண்டுமா.. மிகப்பெரிய இலக்கு! சாதிப்பாரா ரஜினிகாந்த் Cineulagam