தியாக தீபம் திலீபனுடைய சிலை விவகாரம் : கட்சியை களங்கப்படுத்த செய்யப்பட்ட சதி! CVK பகிரங்கம்
தியாக தீபம் திலீபனுடைய சிலை அகற்றல் விவகாரத்திற்கு நாம் துணை போனதான குற்றச்சாட்டை முற்றுமுழுதாக மறுப்பதாக வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
இன்று(28.09.2026) இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சிலை வைப்பிற்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல. திலீபனுடைய நினைவேந்தலுக்கு நாம் எதிரானவர்கள் எனக் கூறுவது நியாயத்திற்கு அப்பாற்பட்டது.
குறித்த சிலையானது தற்காலிகமாக 26 ஆம் திகதி வரை சிலை வைப்பதற்கென்றே அனுமதி கேட்கப்பட்டிருந்தது. அதற்கு சபையே அனுமதி அளித்திருந்தது. அதில் என்னுடைய தீர்மானம் எதுவும் இருக்கவில்லை.
இவ்வாறான சிறுபிள்ளைத்தனமான செயற்பாடுகளை குறிப்பாக தியாக தீபம் திலீபனுடைய பெயரால் நானோ அல்லது எனது கட்சியில் இருப்பவர்களோ செய்ய மாட்டோம்.
மேலும் இந்த அரசாங்கத்திற்கும் சிலை அகற்றலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றால் அகற்றிய சிலையை மீண்டும் அதே இடத்தில் அரசாங்கத்தை நிறுவுமாறும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்...