முன்னாள் சட்டமா அதிபர் குற்றச்சாட்டை விசாரிக்க நாடாளுமன்றத் தெரிவுக்குழு நியமிக்க கோரிக்கை

Sri Lanka Police Easter Parliament of Sri Lanka Easter Attack Sri Lanka
By Sivaa Mayuri May 28, 2023 08:48 AM GMT
Report

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் பரந்த சதி இருப்பதாக முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா முன்வைத்த குற்றச்சாட்டை விசாரிப்பதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை (PSC) நியமிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் 21 நாடாளுமன்ற உறுப்பினர்கள், சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவிடம் இது தொடர்பில் கோரிக்கை கடிதம் ஒன்றை கையளித்துள்ளனர்.

easter attack

மிகப் பெரிய சதி

டி லிவேரா ஓய்வு பெறுவதற்கு சில நாட்களுக்கு முன்னர், 2021 மே 17 அன்று ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்தத் தாக்குதல்களுக்குப் பின்னால் மிகப் பெரிய சதி இருப்பதாக அந்த நேர்காணலில் தப்புல டி லிவேரா தெரிவித்திருந்தார்.

அத்துடன் நௌபர் மௌலவி என்பவர் இந்த சதியில் முக்கியப் பங்காற்றியதாகவும், அவரே மூளையாக செயல்பட்டார் என்று உறுதியாகக் கூற முடியாது என லிவேரா கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

முன்னாள் சட்டமா அதிபர் குற்றச்சாட்டை விசாரிக்க நாடாளுமன்றத் தெரிவுக்குழு நியமிக்க கோரிக்கை | Parliamentary Committee Investigate Easter Attack

சஹ்ரான் ஹாஷிம் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்த முடிவு செய்திருந்தாலும், சதியில் ஒரே ஒருவர் மட்டுமே ஈடுபட்டார் என்றும் அவர் குறித்த நேர்காணலின் போது கூறியிருந்தார் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

விசாரணை கோப்புகள் மற்றும் ஆதாரங்கள்

சட்டமா அதிபராக இருந்த டி லிவேரா அனைத்து விசாரணை கோப்புகள், ஆதாரங்கள் மற்றும் தாக்குதல்களுடன் தொடர்புடைய பிற தகவல்களை நேரடியாக கையாண்டார்.

எனவே தாக்குதல்கள் பற்றி அவருக்கு - இதுவரை வெளியிடப்படாத தகவல்கள் ஏதாவது தெரிந்திருக்கலாம் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் இருப்பதாக சபாநாயகரிடம் கடிதத்தை கையளித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.

முன்னாள் சட்டமா அதிபர் குற்றச்சாட்டை விசாரிக்க நாடாளுமன்றத் தெரிவுக்குழு நியமிக்க கோரிக்கை | Parliamentary Committee Investigate Easter Attack

இந்தநிலையில் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கும் நோக்கில் அவரது அறிக்கைகள் மற்றும் அவற்றின் அடிப்படையை விசாரிக்க வேண்டியது அவசியம் என்று தாம் நம்புவதாகவும் அவர்கள் தமது கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்ற தெரிவுக்குழு

ஆகவே முன்னாள் சட்டமா அதிபரின் கருத்துக்கள் குறித்து நாடாளுமன்றில் அறிக்கையை தாக்கல் செய்வதற்காக, 15 உறுப்பினர்களைக் கொண்ட தெரிவுக்குழுவை நியமிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்மொழிந்துள்ளனர்.

முன்னாள் சட்டமா அதிபர் குற்றச்சாட்டை விசாரிக்க நாடாளுமன்றத் தெரிவுக்குழு நியமிக்க கோரிக்கை | Parliamentary Committee Investigate Easter Attack

அத்துடன் அந்த குழுவின் அறிக்கை, இரண்டு மாதங்களுக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் முன்மொழிகின்றனர்.

முன்னதாக, தமது கருத்துக்கள் தொடர்பில் விசாரணை செய்ய காவல்துறைக்கு அதிகாரம் இல்லை என்று கூறி, தப்புல்ல டி லிவேரா, நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

இதன்படி நீதிமன்றமும் அவரை கைது செய்து விசாரணையை மேற்கொள்வதற்கு ஜூன் 22 வரை இடைக்கால தடையை விதித்துள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW 


அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

26 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

புளியந்தீவு, Toronto, Canada, புங்குடுதீவு, மட்டக்களப்பு

25 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, சிறுப்பிட்டி

26 May, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Alphen aan den Rijn, Netherlands

26 May, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

26 May, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Bremerhaven, Germany, Fribourg, Switzerland, Chennai, India

24 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், India, Toronto, Canada

13 Jun, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada, London, United Kingdom

25 May, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, London, United Kingdom

26 May, 2017
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, வவுனியா

06 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Ajax, Canada

23 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, கல்கிசை

24 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Toronto, Canada

25 May, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Coventry, United Kingdom

24 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, மல்லாகம், London, United Kingdom

21 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், கொழும்பு, Scarborough, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US