உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஜூலியன் பெட்ரிக் பெரேரா விடுத்துள்ள கோரிக்கை
இலங்கையில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்கள் மீது நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து ஐக்கிய நாடுகளின் தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு உயர்மறைமாவட்ட சட்டக் குழுவின் செயலாளரான ஜூலியன் பெட்ரிக் பெரேரா வத்திக்கான் செய்தியிடம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் ஆதரவுடன் சர்வதேச விசாரணையைக் கோருவதற்கான கூடுதல் சட்டப்பூர்வ விருப்பத்தை திருச்சபை தொடர்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
இலங்கை திருச்சபையின் கோரிக்கை
கடந்த பெப்ரவரி 27 முதல் ஏப்ரல் 4 வரை ஜெனிவாவில் நடைபெற்ற 52வது ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை திருச்சபையின் இந்த கோரிக்கையை அவர் முன்வைத்துள்ளார்.
இந்த சம்பவங்கள் தொடர்பில் சாட்சியங்களைச் சேகரிப்பதிலும், சாட்சிகளைத் தொடர்புகொள்வதிலும் சிரமங்கள் உள்ளன.
எனினும் இந்த வழக்கில் இருந்து பல
முக்கிய புலனாய்வாளர்கள் நீக்கப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ள ஜூலியன் பெட்ரிக்
பெரேரா, உண்மைகளை மூடிமறைக்கப்பட்டதற்கான விடயங்களாக இவை இருக்கலாம் என்று
சந்தேகம் வெளியிட்டுள்ளார்