ஒக்டோபர் மாத முதியோர் கொடுப்பனவு இன்று முதல் வங்கிக் கணக்குகளில்
ஒக்டோபர் மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவு இன்று (29) முதல் பயனாளர்களின் அஸ்வெசும வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளது.
அதன்படி, அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவுத் திட்டத்தின் முதலாம் கட்டத்தின் கீழ், 70 வயதுக்கு மேற்பட்ட 616,362 முதியவர்களுக்காக 3,081,810,000 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
அஸ்வெசும வங்கிக் கணக்குகள்
அத்துடன், குறித்த திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ், 70 வயதுக்கு மேற்பட்ட 79,520 முதியவர்களுக்காக 397,600,000 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இரண்டு கட்டங்களின் கீழும் மொத்தமாக 695,882 முதியோர் பயனாளர்களுக்கு ஒக்டோபர் மாதத்திற்காக வழங்கப்படவுள்ள மொத்தத் தொகை 3,479,410,000 ரூபாயாகும்.
குறித்த பயனாளர்கள் இன்று (29) முதல் தங்களது அஸ்வெசும வங்கிக் கணக்குகள் ஊடாக முதியோர் கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ள முடியும்.