பதவி நீக்கப்பட்ட இரு முன்னாள் அமைச்சர்களுக்கு நாடாளுமன்றத்தில் பின்வரிசை ஆசனங்கள்
அமைச்சு பதவிகளிலிருந்து நீக்கப்பட்ட விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோருக்கு நாடாளுமன்றத்தில் பின்வரிசை ஆசனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இதன்படி, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவுக்கு 73 ஆம் இலக்க ஆசனமும் பிவித்துரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பிலவுக்கு 78 ஆம் இலக்க ஆசனமும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதிய தொழில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள எஸ்.பி. திசாநாயக்கவுக்கு வழங்கப்பட்டிருந்த பின்வரிசை இருக்கைக்கு பதிலாக ஆளும் கட்சியின் இரண்டாவது ஆசனம் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, போக்குவரத்து அமைச்சராக பொறுப்பேற்றுள்ள திலும் அமுனுகம கட்சியின் 30 ஆவது ஆசனம் வரையில் முன்னேறியுள்ளார்.
மீண்டும் இராஜாங்க அமைச்சுப் பொறுப்பை பெற்றுள்ள அருந்திக்க பெர்னாண்டோவுக்கு ஆளும் கட்சியின் 36 ஆவது ஆசனம் வழங்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது தெரிவித்துள்ளார்.
கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 29 நிமிடங்கள் முன்
ஹார்முஸ் முடக்கத்தால் தத்தளிக்கும் ஆசிய நாடுகள்... சத்தமின்றி கனடா பக்கம் திரும்பிய ஜப்பான் News Lankasri
பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு News Lankasri
வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்த நபர், அய்யனார் துணை நடிகை வேதனை... சொன்ன திடுக்கிடும் தகவல் Cineulagam