இலங்கை நாடாளுமன்ற பாதுகாப்புப் படையினருக்கு இரசாயன தாக்குதல்களை எதிர்கொள்வது குறித்து பயிற்சி
இலங்கை நாடாளுமன்ற பாதுகாப்புப் படையினருக்கு இரசாயன தாக்குதல்களை எதிர்கொள்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற பணியாளர்கள் மற்றும் பாதுகாப்புத் தரப்பினருக்கு இந்த பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
இராணுவ அதிகாரிகளால் பயிற்சி
இரசாயன ஆயுதங்களை முறியடித்தல் குறித்த நிபுணத்துவம் கொண்ட இராணுவ அதிகாரிகளினால் இந்த பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இரசாயன ஆயுதங்களை பயன்டுத்தினால் அதனை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து விசேட அதிரடிப்படையினர், நாடாளுமன்ற பொலிஸ் பிரிவு என்பனவற்றுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இரசாயன ஆயுத தாக்குதல்
நாடாளுமன்றம் மீது இரசாயன ஆயுத தாக்குதல் நடத்தப்படக்கூடிய சாத்தியங்கள் உண்டு என கிடைக்கப் பெற்ற புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் இந்த பயிற்சி அளிக்கப்படுவதாக சிரேஸ்ட அரசாங்க அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற வளாகம் மீது இவ்வாறான ஓர் தாக்குதல் நடத்தப்பட்டால் அதனை முறியடிக்கும் நோக்கில் இந்த பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 14 மணி நேரம் முன்

Post Office Special திட்டத்தில் ரூ.10 லட்சம் டெபாசிட் செய்தால்.., 5 ஆண்டுகளில் வட்டி மட்டுமே லட்சக்கணக்கில் News Lankasri
