நிர்வாகத்துக்கான நாடாளுமன்ற ஆணையாளரை நியமிக்க அரசியலமைப்புப் பேரவை அங்கீகாரம்
நிர்வாகத்துக்கான நாடாளுமன்ற ஆணையாளராக (ஒம்புட்ஸ்மேன்) ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கே.பி.கே.ஹிரிம்புரேகமவை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை இன்று (28.03.23) ஒப்புதல் அளித்துள்ளது.
சபாநாயகரும், அரசியலமைப்புப் பேரவையின் தலைவருமான மஹிந்த யாப்பா அபேவரதன தலைமையில் 24.03.2023ஆம் திகதி அரசியலமைப்புப் பேரவை கூடியபோதே இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டது.
அரசியலமைப்புப் பேரவை
அத்துடன், அரசியலமைப்பின் 41(ஆ) பிரிவின் கீழ், அரசியலமைப்புப் பேரவையினால் சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு உறுப்பினர்களை நியமிப்பது குறித்த விண்ணப்பப் படிவங்களும் பரிசீலிக்கப்பட்டன.
இதற்கு அமைய கணக்காய்வுச் சேவை ஆணைக்குழுவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்த விண்ணப்பப் படிவங்களில் குழுவின் உறுப்பினர்களாக நியமிப்பதற்கான நால்வரின் பெயர் ஏகமனதாக ஜனாதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
கணக்காய்வுச் சேவை ஆணைக்குழுவின் தலைவர்
அரசியலமைப்புக்கு அமைய கணக்காய்வாளர் நாயகம், பதவி அடிப்படையில் கணக்காய்வுச் சேவை ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்படுவார்.
இக்கூட்டத்தில் பிரதமர் தினேஷ் குணவர்தன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, நாடாளுமன்ற உறுப்பினர்களான சாகர காரியவசம் மற்றும் கபீர் ஹாசிம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லாத கலாநிதி பிரதாப் ராமானுஜம், கலாநிதி தில்குஷி அனுலா விஜேசுந்தர மற்றும் கலாநிதி தினேஷா சமரரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam
