நாடாளுமன்றில் இன்று ஒரு நிமிட மௌன அஞ்சலி
நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் (27.11.2026) ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் திகதி இலங்கையைத் தாக்கிய 'டிட்வா' சூறாவளியினால் உயிரிழந்தவர்களையும், காயமடைந்தவர்களையும் நினைவுகூரும் வகையில் இவ்வாறு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
அஞ்சலி
நாடாளுமன்றத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, இந்த இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூரும் வகையிலும், அந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்து ஓராண்டு நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையிலும் இந்த அஞ்சலி செலுத்தப்படுவதாகத் தெரிவித்தார்.

இதன்போது சபாநாயகர் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று, பாதிக்கப்பட்டவர்களின் நினைவாக ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்து சமுத்திரம் இனி சீனாவின் கையிலா! 18 மணி நேரம் முன்
ஆங்கிலக்கால்வாயைக் கடக்க புலம்பெயர்வோர் பயன்படுத்தும் படகுகளை விற்பவர் மீது கைது வாரண்ட் News Lankasri