பசில் ராஜபக்சவே எனக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்கினார்:தம்மிக்க பெரேரா
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவின் தனிப்பட்ட விருப்பத்திற்கு அமையவே தான் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.
கட்சியின் முடிவை மாற்றிய பசில்
பசில் ராஜபக்ச பதவி விலகியதை அடுத்து அந்த வெற்றிடத்திற்கு வேறு ஒருவரின் பெயர் முன்மொழியப்பட்டிருந்தது எனவும் பசிலின் தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில் தனக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்கினார் எனவும் அவர் கூறியுள்ளார்.
பசில் ராஜபக்ச தன்னுடன் அடிக்கடி கதைப்பார் எனவும் நாடாளுமன்ற உறுப்பின் பதவியை வழங்கியமை குறித்து அவருக்கு மரியாதை செலுத்துவதாகவும் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.
அத்துடன் இளைஞர்களின் பிரச்சினைகளுக்கு தன்னால் தீர்வை வழங்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
சொத்து விபரங்களை கையளித்த தம்மிக்க பெரேரா
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக தம்மிக்க பெரேரா நேற்று சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துக்கொண்டார்.
தம்மிக்க பெரேரா தனது சொத்துக்கள் தொடர்பான முழு விபரங்களையும் சபாநாயகரிடம் கையளித்துள்ளார்.
தம்மிக்க பெரேரா நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பதை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு நேற்று முன்தினம் நிராகரிக்கப்பட்டது.

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
