பளை மத்திய பேருந்து நிலையத்துக்குள் நடக்கும் அசம்பாவிதம் : பயணிகள் அசெளகரியம்
பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் கிளிநொச்சி பளை மத்திய பேருந்து நிலையத்துக்குள் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் துவிச்சக்கர வண்டிகளை நிறுத்துவதாக பயணிகள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.
வேலைக்கு செல்வோர்கள் தங்களது பயண வண்டிகளை குறித்த பேருந்து தரிப்பிடத்திற்குள் நிறுத்திச் செல்வதால் பயணிகள் சிரமங்களை எதிர் நோக்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாடசாலை முடிவடையும் நேரத்தில்
அத்துடன் பாடசாலை முடிவடையும் நேரத்தில் சிலர் பளை பேருந்து தரிப்பிடத்தில் இருந்து கொண்டு மாணவர்கள் மற்றும் பயணிகளிடம் அநாவசியமான செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இதனால் மாணவர்கள் உட்பட பயணிகள் பேருந்து நிலையத்தை விட்டு வெளியில் வந்து வெயிலில் நிற்பதோடு, விபத்துக்களும் இதனால் இடம்பெற வாய்ப்பிருப்பதாக அப்பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
