கொடூர கொலைக்கு இலக்கான பிரியந்த! பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இலங்கை வரலாம்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நாளைய தினம் இலங்கைக்கு வரலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
பாகிஸ்தானில் உயிரிழந்த இலங்கையைச் சேர்ந்த பிரியந்த குமார தியவடனவின் இறுதிக் கிரியைகள் நாளைய தினம் இடம்பெறவுள்ளன.
இந்த நிலையில் இறுதிக்கிரியை நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்கும் பிரியந்தவின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிக்கவும் பாகிஸ்தான் பிரதமர் இலங்கை வரலாம் என உயர்மட்ட வட்டாரங்களில் பேசப்படுவதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த செய்திக்குறிப்பில்,
பாகிஸ்தான் பிரதமரின் இந்த பயணம் குறித்து இலங்கை அரசின் அபிப்பிராயம் கோரப்பட்டுள்ளதாகவும் , அவரின் பாதுகாப்பு குறித்து இலங்கை அரசு ஆலோசனை நடாத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு மற்றும் இதர முன்னேற்பாடுகள் உறுதியாகுமானால், இம்ரான் இலங்கை வருவார் எனவும், சிலவேளை இறுதிக்கிரியைகளில் கலந்துகொள்ள முடியாவிட்டாலும், பின்னர் தனிப்பட்ட பயணமொன்றை மேற்கொண்டு அவர் இலங்கை வந்து பிரியந்தவின் குடும்ப உறுப்பினர்களை சந்திப்பாரென தெரவிக்கப்பட்டுள்ளது.
- தமிழன் -
அடுத்த பிளானில் அறிவுக்கரசி, அழுது புலம்பும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri