வறுமையின் விரக்தியால் மனைவி மற்றும் 7 குழந்தைகளை வெட்டி கொன்ற பாகிஸ்தானியர்
பாகிஸ்தானின்(Pakistan) பஞ்சாப் மாகாணத்தில் வறுமை காரணமாக மன உளைச்சலுக்கு உள்ளான ஒருவர் தனது மனைவி மற்றும் ஏழு குழந்தைகளை வெட்டிக் கொலை செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தொழிலாளியான சஜ்ஜத் கோகர் என்ற நபர் தனது மனைவியான 42 வயதுடைய கவுசர் மற்றும் எட்டு மாதங்கள் முதல் 10 வயது வரை உள்ள நான்கு மகள்கள் மற்றும் மூன்று மகன்கள் ஆகிய ஏழு குழந்தைகளை கோடரியால் தாக்கி சம்பவ இடத்திலேயே கொன்றதாக தெரிவிக்கப்படுள்ளது.
பொலிஸ் விசாரணை
குற்றம் சாட்டப்பட்டவர் நிதிப் பிரச்சினையில் மன உளைச்சலில் இருந்ததாகவும், மனைவியுடன் தினமும் தகராறு செய்து வந்ததாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தநிலையில், குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தனது பிள்ளைகளுக்கு உணவளிக்க முடியாத காரணத்தினால் தான் இந்த கொடூர நடவடிக்கையை மேற்கொண்டதாக சந்தேக நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இதனையடுத்து, பஞ்சாப் முதல்வர் மரியம் நவாஸ்(Maryam Nawaz) இந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ளதுடன் பொலிஸ் கண்காணிப்பாளரிடம் அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

மகாநதியை தொடர்ந்து விஜய் டிவியில் மாற்றப்படும் 2 சீரியல்களின் நேரம்.. எந்தெந்த தொடர் தெரியுமா? Cineulagam

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam
