காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி
காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் 44 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்று இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
ஓப்பரேஷன் சிந்தூர்
மேலும், போர் நிறுத்த விதிகளை மீறி எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில், தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக 'ஓப்பரேஷன் சிந்தூர்' தாக்குதலை இந்தியா நடத்தியுள்ளது.
சுமார் 25 நிமிடங்கள் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தியது.
இதனால் இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் பாகிஸ்தான் இராணுவம் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Optical illusion: படத்தில் நூற்றுக்கணக்கான “7” களில் மறைந்திருக்கும் ”9” ஐ கண்டுபிடிக்க முடியுமா? Manithan

ஆபரேஷன் சிந்தூர்... சுட்டு வீழ்த்தப்பட்ட ரஃபேல் விமானம்: உறுதி செய்த பிரெஞ்சு உளவுத்துறை News Lankasri
