ஆசிய கிண்ணத்துக்கான பாகிஸ்தானிய அணி அறிவிப்பு!
2025 ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 28 வரை ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவிருக்கும் 20க்கு 20 முத்தரப்பு தொடர் மற்றும் ஆசிய கிண்ணத்துக்கான பாகிஸ்தான் அணிகளை பாகிஸ்தான் தேசிய தேர்வுக் குழு அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சிய அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு தொடர் ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 7 வரை சார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
பாகிஸ்தானிய அணி
இதனையடுத்து எட்டு அணிகள் கொண்ட ஆசிய கிண்ண 20க்கு20 போட்டித் தொடர் செப்டம்பர் 9 முதல் 28 வரை அபுதாபி மற்றும் துபாயில் நடைபெறும்.
இதில், இந்தியா, ஓமன் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்துடன் பாகிஸ்தான் குழு ஏ யில் இடம்பெற்றுள்ளது.
இந்தநிலையில் பாகிஸ்தான் அணியில் சல்மான் அலி ஆகா தலைமையில், அப்ரார் அகமது, ஃபஹீம் அஸ்ரஃப், ஃபகார் ஜமான், ஹாரிஸ் ரவூஃப், ஹசன் அலி, ஹசன் நவாஸ், ஹ_சைன் தலத், முகமது ஹாரிஸ், முகமது நவாஸ், முகமது வசீம் ஜூனியர், சாஹிப்சாதா ஃபர்ஹான், சைம் அயூப், சல்மான் மிர்சா, அப்ரிடி மற்றும் சுஃப்யான் மோகிம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கைலாச வாகனம்



