இலங்கைக்கு மேலதிகமாக 200 டன் மனிதாபிமான நிவாரணப் பொருட்களை அனுப்பும் பாகிஸ்தான்
சூறாவளியால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், இலங்கைக்கு மேலதிகமாக 200 டன் மனிதாபிமான நிவாரணப் பொருட்களை பாகிஸ்தான் அனுப்பும் என அந்நாட்டின் மத்திய கடல்சார் விவகார அமைச்சர் முகமது ஜூனைத் அன்வர் சௌத்ரி வியாழக்கிழமை அன்று தெரிவித்தார்.
பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் அறிவுறுத்தலின் பேரில் டிட்வா சூறாவளிக்குப் பிறகு பாகிஸ்தானின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் இலங்கைக்கு விஜயம் செய்த அமைச்சர், கொழும்பில் உள்ள இலங்கைத் தலைவர்களுடனான சந்திப்புகள் மற்றும் கள நிலைமை குறித்த மதிப்பீட்டிற்குப் பிறகு இந்த முடிவை எடுத்துள்ளார்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நடுத்தர காலத் தேவைகளை நிவர்த்தி செய்ய அதிகரித்த ஆதரவு அவசியம் என அவர் முடிவுக்கு வந்துள்ளார்.
தயார் நிலை
200 டன் நிவாரணப் பொருட்கள் கொண்ட கப்பல் கடல் வழியாக அனுப்பப்பட்டுள்ளதுடன், அது டிசம்பர் 13ஆம் திகதிக்குள் இலங்கையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தச் சரக்குகளில் கூடாரங்கள், போர்வைகள், கம்பளிகள், கொசு வலைகள், முகாம் விளக்குகள், பாய்கள், உயிர்காப்பு அங்கிகள், ஊதப்பட்ட படகுகள், நீரை வெளியேற்றும் பம்புகள், மருந்துகள், பால்மா மற்றும் உடனடிப் பாவனைக்கான சிகிச்சை உணவு ஆகியவை அடங்கும்.
அத்துடன், பாகிஸ்தான் கடற்படைக் கப்பல்கள் மற்றும் விமானச் சொத்துகள் இலங்கையில் நடந்து வரும் மீட்பு, போக்குவரத்து மற்றும் அவசரகால நடவடிக்கைகளுக்கு ஆதரவை வழங்கி வருவதுடன், கடற்படையினர் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள சமூகங்களுக்கு உதவ உள்ளூர் அதிகாரிகளுடன் நெருக்கமாகச் செயற்பட்டு வருகின்றனர்.
மனிதாபிமான மற்றும் உட்கட்டமைப்புச் சேதங்களில் இருந்து இலங்கை மீண்டு வர தொடர்ந்து உதவ பாகிஸ்தான் தயாராக இருப்பதாக ஜூனைத் சௌத்ரி மேலும் கூறினார்.
படையப்பா ரீ ரிலீஸ்: விஜய் கில்லி படம் செய்த சாதனையை முறியடிக்குமா.. முன்பதிவு வசூல் விவரம் Cineulagam
துப்பாக்கி முனையில் 16 வயது சிறுவனை உறவுக்கு..அதிரவைத்த வழக்கில் இளம் பெண்ணிற்கு பிடியாணை News Lankasri
பிரித்தானியாவில் இந்திய வம்சாவளியினருக்கு ஆண் குழந்தைகள் பிறப்பு அதிகம்: சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள விடயம் News Lankasri