இந்தியா வல்லரசாகிறது பாகிஸ்தான் பிச்சை எடுக்கிறது : பாகிஸ்தான் மதத்தலைவரின் ஆதங்கம்
பாகிஸ்தானின் பிரபல வலதுசாரி இஸ்லாமியத் தலைவரும், ஜமியத் உலேமா-இ-இஸ்லாம் பாகிஸ்தானின் தலைவருமான மௌலானா ஃபஸ்லுர் ரஹ்மான்,தமது சொந்த நாட்டை விமர்சித்துள்ளார்
அத்துடன், சிறந்த வணிக வாய்ப்புகள் மற்றும் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்திற்காக இந்தியாவை அவர் பாராட்டியுள்ளார்.
பாகிஸ்தானின் தேசிய சட்டமன்றத்தில் உரை ஒன்றை நிகழ்த்திய அவர், வலுவான தலைமையின் கீழ் இந்தியா வல்லரசாகும் நிலையில உள்ளது, அதே நேரத்தில் பாகிஸ்தான் திவால்நிலைக்கு அருகில் உள்ளது என்று கூறினார்.
புhகிஸ்தானின் முன்னைய அரசாங்கங்களை ஃபஸ்லுர் ரஹ்மான் விமர்சித்தார்.
அந்த அரசாங்கத்தரப்பினரின் முடிவுகள் திரைக்குப் பின்னால் இருந்து கண்ணுக்கு தெரியாத சக்திகளால் எடுக்கப்பட்டன
எனவே குறித்த சக்தி வாய்ந்தவர்கள், பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை வெறும் பொம்மைகளாக ஆக்கிவிட்டதாகவும் அவர்களால் தான் பாகிஸ்தான் இன்று பிச்சை எடுக்கும் நிலையில் உள்ளது என்றும் அவர் கூறினார்.
நவாஸ் செரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் மற்றும் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகியவை மக்களின் ஆணையைத் திருடுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
பாகிஸ்தானின் தற்போதைய நிதி நிலைமை பற்றிக் குறிப்பிட்ட ஜமியத் உலமா-இ-இஸ்லாம் தலைவர், திவால்நிலையைத் தவிர்க்க பாகிஸ்தான் சர்வதேச நாணய நிதியத்திடம் கெஞ்சுகிறது என்றும் குறிப்பிட்டார்
இந்தியாவையும் நம்மையும் ஒப்பிட்டுப் பாருங்கள். இரண்டு நாடுகளுக்கும் ஒரே நாளில் சுதந்திரம் கிடைத்தது.
ஆனால் இன்று இந்தியா வல்லரசு ஆக வேண்டும் என்று கனவு காண்கிறது, திவாலாவதைத் தவிர்க்க நாங்கள் கெஞ்சுகிறோம். இதற்கு யார் பொறுப்பு?" என்று ஜமியத் உலேமா-இ-இஸ்லாம் பாகிஸ்தானின் தலைவர் ஃபஸ்லுர் ரஹ்மான் கேள்வி எழுப்பினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |