அனுராதபுரம் செல்வோருக்காக புதிய கையடக்க தொலைபேசி செயலி!
பொசன் நிகழ்வை முன்னிட்டு, அனுராதபுரத்திற்கு வருகை தரும் மக்களுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் கையடக்க தொலைபேசி செயலி ஒன்றின் ஊடாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
கையடக்க தொலைபேசி செயலி
இதன்படி, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தால் உருவாக்கப்பட்ட 'பொசன் வந்தனா'(Poson Vandana) என்ற கையடக்க தொலைபேசி செயலியை நீங்கள் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செயலியின் பயன்பாட்டின் ஊடாக, வாகன தரிப்பிடங்கள் மற்றும் அந்த தரிப்பிடத்தில் காணப்படும் வாகனங்களின் எண்ணிக்கை, தானசாலை (தன்சல்) உள்ள இடங்கள், முதலுதவி, மலசலகூடங்கள் மற்றும் பாதுகாப்பாக நீராடக்கூடிய இடங்கள் தொடர்பிலான அனைத்து தகவல்களையும் பெற்றுக்கொள்ள முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
புவிசார் அரசியலை புரிந்து கொள்ள தலைப்படும் தமிழ் தலைமைகள் 18 மணி நேரம் முன்
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri
பதறி அடித்துக்கொண்டு வீட்டிற்கு வந்து தாரா சொன்ன விஷயம், அதிர்ச்சியில் நந்தினி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam