விரைவில் கைது செய்யப்படவுள்ள மற்றுமொரு பிரபல முன்னாள் அமைச்சர்
விளையாட்டு, இளைஞர் விவகாரங்கள் மற்றும் சுற்றுலாத்துறையின் முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ விரைவில் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்தாண்டு நடுப்பகுதியில் காலியில் நடைபெற்ற கண்காட்சி மற்றும் இசை நிகழ்ச்சியில் நிதி முறைகேடுகள் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பில் ஹரின் கைது செய்யப்படலாம் என தெரியவந்துள்ளது.
இளைஞர்களை ஒடுக்குமுறையில் இருந்து விடுவித்தல் என்ற தலைப்பில் காலி சமனல மைதானத்தில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நடத்திய “Smart Youth” கண்காட்சி மற்றும் இசை நிகழ்ச்சிக்கு அமைச்சரவை ஒப்புதல் பெறுவதற்கு முன்பு 31,417,778 ரூபாய் பணத்தை சுற்றறிக்கைகளை மீறியும் பயனற்ற முறையிலும் செலவிடப்பட்டதாக தணிக்கை அறிக்கையில் தெரியவந்துள்ளது.
கண்காட்சி மற்றும் இசை நிகழ்ச்சி
Smart Youth கண்காட்சி மற்றும் இசை நிகழ்ச்சி 2024ஆம் ஆண்டு ஜூன் 14 மற்றும் 15 ஆகிய திகதிகளில் நடைபெற்றது.
மேலும் இதற்கான அமைச்சரவைப் பத்திரம் அங்கீகரிக்கப்படுவதற்கு முன்பும், அமைச்சரவை முடிவு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்திற்கு தெரிவிக்கப்படுவதற்கு முன்பும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இது தொடர்பான அமைச்சரவை பத்திரம் 2024ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15ஆம் திகதியன்று அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டது.
முறைகேடுகள்
மேலும் இது குறித்து 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் திகதியன்று தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டது.
இந்த கண்காட்சி மற்றும் இசை நிகழ்ச்சியை நடத்துவதில் முறைகேடுகள் நடந்ததாக பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ விரைவில் அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட உள்ளதாகவும் வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam

Singappenne: அன்பு, ஆனந்தியின் புதிய திட்டம்- உதவி செய்யும் யாழினி.. பயந்து நடுங்கும் துளசி Manithan
