நாடளாவிய ரீதியில் கடமையில் ஈடுபடவுள்ள ஆயிரக்கணக்கான பொலிஸார்!
பொசன் பூரணையை முன்னிட்டு, நாளை முதல் 3,500 பொலிஸார் கடமையில் ஈடுபடவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அனுராதபுரம், மிகிந்தலை மற்றும் அனுராதபுரத்தில் அமைந்துள்ள 8 வழிபாட்டுத் தலங்களுக்கு வருகை தரும் பக்தர்களின் பாதுகாப்புக்காக குறித்த பொலிஸார் கடமையில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பை உறுதி செய்தல்
வழிபாட்டுத் தலங்களை அடிப்படையாக கொண்டு, போக்குவரத்தை நிர்வகிக்கவும், பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குளங்களைச் சுற்றி ஏற்படும் விபத்துகளைத் தடுக்கவும் இந்தப் பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய பொசன் வாரம் நேற்று (07) ஆரம்பமாகி எதிர்வரும் 13 ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தேசிய பொசன் பண்டிகை அனுராதபுரம் நகரம், மிஹிந்தலை மற்றும் தந்திரிமலை ஆகிய புனித தலங்களை மையமாகக் கொண்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





உலக அரசியல் பற்றி ஒரு கேள்வி - யாரை நோக்கி கடிதம் எழுத வேண்டும்! 17 மணி நேரம் முன்

நீட் தேர்வில் 99.9 சதவீதத்துடன் முதலிடம் பிடித்த மாணவி யார்? இவரின் வெற்றிக்கான ரகசியம் News Lankasri
