தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் இருந்து விலை உயர்ந்த கிளி திருட்டு
தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் உள்ள கூண்டிலிருந்து 500,000 க்கும் மேற்பட்ட மதிப்புள்ள நீலம் மற்றும் மஞ்சள் நிற மக்கா கிளி ஒன்று திருடப்பட்டுள்ளது.
இந்த திருட்டு கடந்த 4 ஆம் திகதி இரவு இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் மிருகக்காட்சிசாலைக்கு அருகிலுள்ள சிற்றுண்டிச்சாலையில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கருவியில் குறித்த விடயம் பதிவாகியுள்ளது.
மஞ்சள் மக்காக்கள்
கிளி வைக்கப்பட்டிருந்த கூண்டில் 30 நீலம் மற்றும் மஞ்சள் மக்காக்கள் வைக்கப்பட்டிருந்ததாகவும், அவற்றில் ஒன்று இவ்வாறு திருடப்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது.
மறுநாள் காலை கூண்டைத் திறக்கச் சென்றபோது, பாதுகாப்பு பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கவனித்த மிருகக்காட்சிசாலைப் பராமரிப்பாளர், சாவியை எடுத்துச்செல்ல மிருகக்காட்சிசாலையின் உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வின் போது, கூண்டில் இருந்த ஒரு நீலம் மற்றும் மஞ்சள் மக்கா கிளி காணாமல் போனதை அதிகாரிகள் கவனித்துள்ளனர்.
பின்னர், நிர்வாகம் இது தொடர்பாக ஒரு பாதுகாப்பு அதிகாரி மூலம் தெஹிவளை பொலிஸில் முறைபாடு அளித்துள்ளது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri
