சர்வதேச செம்பியன்ஸ் கிண்ணம்: A பிரிவில் கடைசி நிலைக்கு தள்ளப்பட்ட பாகிஸ்தான்
சர்வதேச செம்பியன்ஸ் கிண்ணம் 2025 போட்டிகளின், புதுப்பிக்கப்பட்ட புள்ளிகள் அட்டவணை வெளியாகியுள்ளது.
நேற்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த போட்டி, மழை காரணமாக கைவிடப்பட்டதால், பாகிஸ்தான் அணிக்கும், பங்களாதேஸ் அணிக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
நிகர ஓட்ட விகிதம்
இதன்படி புள்ளிப்பட்டியலில் பங்களாதேஷ் மூன்றாவது இடத்திலும், குறைந்த நிகர ஓட்ட விகிதம் காரணமாக, போட்டி நடத்துனரான பாகிஸ்தான் கடைசி இடத்தையும் பிடித்தது.
முன்னதாக, போட்டி தொடங்குவதற்கு முன்பே இரண்டு அணிகளும் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டன. இதற்கமைய குழு A இலிருந்து இந்தியாவும் நியூசிலாந்தும் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
அத்துடன், அட்டவணையில் முதலிடத்தைப் பிடிக்கும் இடத்தைத் தீர்மானிக்க ஞாயிற்றுக்கிழமை, இந்த இரண்டு அனைகளும் மோதுகின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |