யாழ். போதனா வைத்தியசாலையில் நோயாளிகளுக்கு பெரும் சிக்கல்
யாழ். போதனா வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையினால் வைத்தியசாலையில் நோயாளர்கள் பெரும் அவதிவை எதிர்நோக்கியுள்ளனர்.
வைத்தியசாலை நிர்வாகத்திடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று முதல் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.
இத்தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக அவசர சிகிச்சைகள் தவிரந்த ஏனைய சிகிச்சைகளை வைத்திய அதிகாரிகள் இடைநிறுத்தி உள்ளதால் வைத்தியசாலைக்கு சென்ற நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்நோக்கியிருந்தனர்.
வைத்தியசாலையின் செயற்பாடு
வைத்தியர்கள் சங்கத்தின் இப்போராட்டத்தினால் வைத்தியசாலையின் வழபையான செயற்பாடுகள் பலவும் இயங்காத நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதனால் பல்வேறு சிகிச்சைகளுக்காக வைத்திய சாலைக்கு சென்ற நோயாளர்கள் சிகிச்சையை பெற்றுக் கொள்ள முடியாமல் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இதேவேளை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் இத் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்தும் இடம்பெற்று வருவதால் நோயாளர்கள் பெரும் ஆபத்தை எதிர்நோக்கி உள்ளதாகவும்நோயாளர்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை விரைந்து எடுக்கப்பட வேண்டுமெனவும் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வவுனியா
வரவு – செலவுத் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள சம்பளத் திருத்தத்தில் தாதியர் சேவைக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளமை மற்றும் மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் தாதியர்களினால் வைத்தியசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
அந்தவகையில் இன்றையதினம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் ஒரு மணி நேர பணிபகிஸ்கரிப்பிலும் ஈடுபட்டிருந்தனர்.
இதன் போது அரசே தாதியர்களிற்கு வரவு செலவு திட்டத்தில் சரியான நீதியை பெறீறுக்கொடு, 24 மணிநேரம் 365 நாட்கள் வேலை செய்தவர்களுக்கு குறைத்து ஏன் போன்ற பதாதைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |