வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பதிவுசெய்த பாகிஸ்தான்
லாகூரில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் முக்கோண தொடர் போட்டியில், பாகிஸ்தான் அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பதிவுசெய்து இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.
242 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான், 154 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் விளிம்பிற்குத் தள்ளப்பட்டது.
பாகிஸ்தானின் வெற்றி
எனினும், இறுதி விக்கெட்டுக்கு ஷதாப் கான் மற்றும் ஹாரிஸ் ராஃப் ஜோடி 89 ஓட்டங்களை சேர்த்து பாகிஸ்தானை வெற்றி பெறச்செய்தது. இது, ஒருநாள் போட்டிகளில் வெற்றிகரமான துரத்தலின் (Successful Chase) போது 10வது விக்கெட்டுக்கு எடுக்கப்பட்ட அதிகபட்ச ஓட்டங்களாகும்.

1975 உலகக்கிண்ணத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக மேற்கிந்திய அணியின் டெரிக் முர்ரே - எண்டி ராபர்ட்ஸ் ஜோடி அமைத்த 64 ஓட்டங்கள் சாதனையை இவர்கள் முறியடித்துள்ளனர்.
அபாரமாக ஆடிய ஷதாப் கான் தனது கன்னி ஒருநாள் சதத்தைப் பதிவுசெய்து 113 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். முன்னதாக, இங்கிலாந்து அணி பென் டக்கட்டின் (105 ஓட்டங்கள் ) சதத்தின் உதவியுடன் 241 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.
பாகிஸ்தான் அணியின் தலைவர் ஷாஹீன் ஷா அஃப்ரிடி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இந்த நிலையில் ஒக்டோபர் 31 அன்று லாகூரில் நடைபெறும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் விளையாடவுள்ளது.
இன்னும் 1,000 நாட்களுக்குள்... பிரித்தானிய மக்களைத் தயாராக இருக்க அரசாங்கம் வலியுறுத்தல் News Lankasri
வெளிநாட்டில் இருக்கேன், சொல்லாம போறீங்களே அப்பா.. செஃப் தாமு மறைவால் கண்ணீர் விட்டு கதறும் புகழ் Cineulagam