செவ்வந்தியின் விசாரணையில் சிக்கிய கெஹெல்பத்தர பத்மே: சொத்துக்கள் பறிமுதல்
பாதாள உலகக் குழு தலைவர் கெஹெல்பத்தர பத்மேவினால் சட்டவிரோதமாக சம்பாதிக்கப்பட்ட ரூபாய் 50 மில்லியன் மதிப்புள்ள சொத்துக்கள் முறைகேடான சொத்துக்களை விசாரிக்கும் பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நேபாளத்தில் இஷாரா செவ்வந்தியுடன் கைது செய்யப்பட்ட கம்பஹா பபாவின் தொலைபேசி அழைப்புகள் தொடர்பான பதிவுகளை ஆராயவும் நீதிமன்றத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பு
மேலும் கெஹெல்பத்தர பத்மேவின் வழிகாட்டுதல்களுக்கு அமைய நாட்டில் நடத்தப்பட்ட கொலைச் சம்பவங்களுக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகள், வெடிபொருட்கள் போன்றவற்றையும் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேக நபர்கள் சர்வதேச ரீதியில் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பை முன்னெடுத்துச் சென்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் சர்வதேச நாடுகளிலிருந்து சட்டவிரோதமாக துப்பாக்கிகள் கொண்டுவரப்பட்டுள்ளமையும் தெரிய வந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




