வெலிகம பிரதேச சபைத் தலைவர் சுட்டுப் படுகொலை
புதிய இணைப்பு
துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கான வெலிகம பிரதே சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர உயிரிழந்துள்ளார்.
சபைத் தலைவருக்குரிய தன்னுடைய கதிரையில் அமர்ந்திருந்த போது அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான பிரதேச சபை தலைவரை மாத்தறை பொது மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச் சென்றுள்ளனர்.
எனினும், படுகாயமடைந்த தலைவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மோட்டார் சைக்கிளில் வந்து துப்பாக்கிச் சூடு நடத்திச் சென்ற துப்பாக்கிதாரிகள், பிரதேச சபைத் தலைவரிடம் ஒரு கடிதத்தில் கையெழுத்து வாங்குவதற்காக சபைக்குள் நுழைந்ததாகவும் ஆரம்பக்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதலாம் இணைப்பு
வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதேச சபை கட்டிடத்தில் தன்னுடைய அறையில் அமர்ந்திருந்த போது அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri
நேட்டோ தலைவருடன் சந்திப்பு... பிரித்தானியா உட்பட 8 நாடுகள் மீதான வரியை ரத்து செய்த ட்ரம்ப் News Lankasri
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan