நெல் செய்கையை பாரியளவில் குறைக்கத் தீர்மானம்!
யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், தற்போது பயிரிடப்படும் வயல் நிலங்களில் மூன்றிலொரு பங்கில் நெல் செய்கையை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.
நேற்று (26) பொலன்னறுவை, ஹிங்குராக்கொட – கல்அமுன பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், நாம் தற்போது பயிரிடும் வயல் நிலங்களில் கணிசமான அளவைக் குறைக்க வேண்டியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

தற்போதுள்ள வயல்களில் மூன்றிலொரு பங்கிலாவது நெல் செய்கையை நிறுத்தாவிட்டால், விவசாயிகளும் நாட்டின் பொருளாதாரமும் விவசாயத் துறையும் பாரிய நெருக்கடிக்கு உள்ளாகும் என குறிப்பிட்டுள்ளார்.
நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் உள்ள நெல் கையிருப்பைச் சந்தைக்கு விட்டால், நெல்லின் விலை மேலும் வீழ்ச்சியடையும். அரிசி விலையும் குறையும்; ஆனால் அரிசி விலையை அளவுக்கு அதிகமாகக் குறைக்க முடியாது.
எனவே, அரிசியை அடிப்படையாகக் கொண்ட மாற்றுத் தீர்வை நாம் தேட வேண்டியுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்வரும் பெரும்போக அறுவடை வருவதற்கு முன்னரே நமக்குப் பாரிய சிக்கல் ஒன்று எழவுள்ளது. விவசாயிகள் நெல் பயிரிட்டாலும், இலங்கையில் அதனை விற்பனை செய்வதற்கு இடமில்லை என்பதே உண்மை என குறிப்பிட்டுள்ளார்.
தற்போதே எம்மிடம் தேவைக்கு அதிகமான நெல் கையிருப்பில் உள்ளது. எனவே, நாம் மாற்றுப் பயிர்ச்செய்கைக்குச் செல்ல வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இதற்காகவே, ஹம்பாந்தோட்டையில் ஒரு ஏக்கர் வயல் நிலத்தில் எட்டிலொரு பங்கில் குரக்கன் பயிரிடும் திட்டத்தை ஆரம்பித்துள்ளோம். இதற்காக மேலதிகமாக பத்தாயிரம் ரூபாயும் வழங்குகிறோம். புதிதாக ஒரு ஏக்கர் வயல் நிலத்தைக் கூட அதிகரிக்கத் தேவையில்லை என குறிப்பிட்டுள்ளார்.
இதனைக் கூறும்போது எம்மைத் திட்டுகிறார்கள்; திட்டு வாங்குவது எமக்குப் பழக்கமான ஒன்றுதான். நாம் இவ்வளவு நெல்லை யாருக்குச் சாப்பிடக் கொடுப்பதற்காகப் பயிரிடுகிறோம்? ஆகவே, வயல்களில் நெல்லுக்குப் பதிலாக வேறு நிரந்தரப் பயிர்களைப் பயிரிட வேண்டும் என அமைச்சர் லால்காந்த தெரிவித்துள்ளார்.