கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணப்பொதிகளை பரிசோதிக்க விசேட திட்டம்
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேறும் பயணிகளின் பயணப்பொதிகளை இலகுவாக அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சில விமானப்பயணிகள் தங்களது பயணப்பொதிகளுக்கு மாறாக வேறொரு பயணப்பொதிகளை எடுத்துச் செல்வதும் சில பயணிகள் தெரிந்தே மற்றவர்களது பயணப்பொதிகளை திருடிச்செல்வதும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.
இவ்வாறு மாற்றப்பட்டு எடுத்து செல்லப்பட்ட பயணப்பொதிகள் மீண்டும் அடிக்கடி விமான நிலையத்திற்குத் திரும்புகின்றன.
இந்நிலையில் அவற்றின் உரிமையாளர்களுக்கு வழங்குவது மிகவும் கடினமாக உள்ளது. இதனை தடுக்கும் முகமாக இப் புதிய "tag " குறிச்சொற்கள் முறை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.





ரூ.15,000 சம்பளம் ஆனால் 24 வீடுகள் ரூ.30 கோடிக்கு சொத்துக்கள்! முன்னாள் குமஸ்தா சிக்கியது எப்படி? News Lankasri

பார்க்கிங் படத்திற்கு 3 தேசிய விருதுகள், ஜீ.வி.பிரகாஷ் சிறந்த இசையமைப்பாளர்.. விருது வென்றவர்கள் லிஸ்ட் Cineulagam
