கனடாவில் பரவும் நோய்த்தாக்கம் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
ஆப்பிரிக்காவில் பரவி வரும் குரங்கம்மை நோய் தொற்று கனடாவிற்கும்(Canada) பரவக்கூடும் என கனேடிய மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் ஆபிரிக்காவுக்கு வெளியே பாகிஸ்தான் மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளில் குரங்கம்மை நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவசரகால நிலை
கனடாவிற்கு சர்வதேச பயணிகள் வருகை தருவதும் பயணிப்பதும் அதிகமாக காணப்படுவதனால், கனடாவில் இந்த நோய் தொற்று பரவக்கூடிய அபாயத்தை மறுப்பதற்கில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

உலக சுகாதார அமைப்பு குரங்குமை நோய் தொற்று அவசரகால நிலையாக அறிவித்துள்ளது. குரங்கமை நோய் தொற்றானது கோவிட் 19 பெருந்தொற்று போன்று இலகுவில் பரவக்கூடியது அல்ல என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் குரங்கமை நோயை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் உண்டு எனவும், வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் போது அவதானமாக இருக்க வேண்டியது அவசியம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சக்திக்கு வந்த ஷாக்கிங் தகவல், விசாலாட்சியை சுட துணிந்த கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
12 ஆண்டுகளுக்கு முன் கோமாவிற்கு சென்ற உலக சாம்பியன் ஷூமேக்கர் - உடல் நிலையில் முன்னேற்றம் News Lankasri