ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் புரட்டாதிச் சனி: மக்களின் செயற்பாட்டால் எழுந்துள்ள விசனம்(Photos)
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயம் என்றால் அது ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயம் ஆகும்.
நவக்கிரகங்களுக்கான விரத அனுஷ்டானங்களை செய்து தங்கள் நேர்த்திக் கடன்களை செய்து கொள்வதில் மக்கள் இந்த ஆலயத்திற்கு வந்து செல்வதால் விழாக் காலங்களிலும் விரத காலங்களிலும் மக்கள் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தை நாடி வருகின்றனர்.
புரட்டாதி சனி என்பது சனீஸ்வரனை வேண்டி மேற்கொள்ளப்படும் விரதமாகும். புரட்டாதி மாதம் பிறந்தாலே புரட்டாதிச் சனி விரதம் பற்றிய ஆர்வம் சைவசமயிகளிடையே ஏற்பட்டு விடும்.
வருடத்தின் இறுதி காலாண்டானது விரதங்கள் நிரம்பிய மாதங்களாக கடந்து செல்வது இயல்பான வாழ்வாக அவர்களுக்கு அமைந்துவிடும். இந்த வருடம் புரட்டாதிச் சனி விரதம் நான்கு வாரங்களுக்கு தொடர்ந்து வரும் சனிக்கிழமைகளில் சனீஸ்வரருக்கான விரதம் அனுஷ்டித்துக் கொண்டிருக்கின்றனர்.

கூச்சலிட்டு குழப்பம் விளைவிக்கும் அம்பிட்டிய சுமன தேரர்! மட்டக்களப்பில் பொலிஸார் தேரர்களுக்கிடையே பதற்றம் (Video)
புரட்டாதிச் சனி விரத நாள்
எதிர்வரும் 14.10.2023 ஆம் நாளான சனிக்கிழமை 2023 ஆம் ஆண்டின் இறுதி புரட்டாதிச் சனி விரத நாளாகும் என ஆலயத்தின் திருப்பணிகளில் தன்னை ஒப்பித்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் சனீஸ்வரருக்காக எள்ளெண்ணை எரித்து வழிபடுதலும் வியாழன் மற்றும் சனி கிரகங்களுக்காக நீர் அபிசேகம் செய்து வழிபடுதலும் இறுதியாக அர்ச்சனை வழிபாடும் நிகழ்ந்தேறுவதை அவதானிக்க முடிந்தது.
காலை பூஜைக்கு அதிகளவான மக்கள் கூடியிருந்தனர். மூன்றாவது சனிக்கிழமை காலைப் பூஜை மக்களால் நிறைந்திருந்தது. அன்றைய நண்பகல் பூசைக்கு காலைப் பூசையை விட அதிகளவான மக்கள் திரண்டு கொண்டிருப்பதையும் நோக்க முடிந்தது.
நவக்கிரக வழிபாடடிலும், கற்பூராதனை முடிந்து பக்தர்கள் தொட்டு வணங்குவதற்காக கொண்டுவரும் போதும், பக்தர்கள் முண்டியடித்துக் கொண்டதை அவதானிக்க முடிந்ததாத கூறப்படுகிறது.
ஏனையவர்களுக்கும் இடமளித்து வழிபாடியற்றும் நற்பண்பை ஆலயங்களின் மூலம் வளர்க முடியும் என்பதை இங்கே சுட்டிக்காட்டல் பொருத்தமானதாக இருக்கும் எனபது ஆர்வலர்களின் கருத்ததாக காணப்படுகிறது.
நவக்கிரக வழிபாட்டில் ஈடுபட்டோரின் பொறுப்பற்ற செயல்கள்
காலைப் பூஜை ஆரம்பமாவதற்கு முன்னர் சனி மற்றும் வியாழன் கிரகங்களுக்கு நீர் அபிசேக வழிபாடு நடைபெற்றுள்ளது. மக்கள் பற்றுச்சிட்டை பெற்று வரிசையில் சென்று தங்கள் நேத்திக்கடன்களை செய்துகொண்டிருந்தனர்.
மக்கள் கூட்டம் அதிகமாகிக் கொண்டு போகும் போது வரிசையொழுங்கு குழம்பிப்போக பக்தர்கள் கூட்டமாகியுள்ளனர்.
பூசகரினால் தன் பணியினை இலகுவாக செய்ய முடியாது போகவே பலதடவை வரிசையாக வருமாறு கேட்டுக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
எனினும் யாரும் வரிசையை பின்பற்றவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும்.
நேத்திக்கடன்களை செய்வோர் எதிர்கொண்ட இடர்
எள்ளெண்ணை விளக்கினை சுமந்தவாறு நவக் கிரகங்களைச் சுற்றி வந்து விளக்கினை உரிய இடத்தில் வைத்து தங்கள் நேத்தியினை நிறைவு செய்ய வேண்டும்.
இதற்காக சிட்டிகளில் நல்லெண்ணை இட்டு எள்ளு இட்டு கட்டிய திரியினை கொழுத்தி விளக்கினை ஏற்றி நவக்கிரகங்களை சுற்றி வந்தனர்.
இந்த வழிபாட்டில் ஈடுபட்டு பக்தர்களுக்கு இடையூறாக நவக்கிரகங்களை சுற்றியுள்ள இடத்தில் அதிகளவான பக்தர்கள் குவிந்திருந்தனர்.
நேத்திக் கடனை செய்பவர்கள் குவிந்திருந்த மக்களையும் சேர்த்து சுற்றி வந்தனர் என்பது மனவருத்தத்திற்குரிய விடயமாகும்.
நவக்கிரகங்களை சுற்றியுள்ள இடத்தினை விட்டு விலகி நேத்திக் கடன்களை செய்பவர்களுக்காக விட்டுக்கொடுக்க வேண்டும் என்ற உணர்வு யாருக்குமே அங்கு வரவில்லை.
ஆலய நிர்வாகமும் பக்தர்கள் இலகுவாக இயங்கும் வண்ணம் எத்தகைய முன்னேற்பாடுகளையும் செய்யாதிருந்தமையானது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
ஆலயத்தினரின் பொறுப்பற்ற செயல் பக்தர்கள் விசனம். ஆலயத்திற்கு வந்த பக்தர்கள் தங்கள் பாதணிகளை இராஜகோபுரத்திற்கு முன்னாக கழற்றிவிட்டு ஆலயத்திற்குள் சென்றிருந்ததை அவதானிக்க முடிந்துள்ளது.
நீண்ட நேரம் ஆலயத்திற்குள் வழிபாடுகளில் கலந்துகொண்டிருந்தவர்கள் தங்கள் வழிபாடு முடிந்து வெளியே வந்த போது பாதணிகளை காணாது திகைத்து தேடி அலைந்துள்ளனர்.
ஒட்டுசுட்டான் ஆலய நிர்வாகம்
பலர் விசனப்பட்டுக் கொண்டமையை அவதானிக்க முடிந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.
“மலேசியாவின் பத்திகேஸ் முருகன் ஆலயத்தில் நித்தம் வழிபடச் செல்லும் தான் தன் பாதணிகளோடு ஆலய முன்றல் வரை சென்று அங்கு கழற்றி வைத்து விட்டு மலையேறி வழிபட்டு திரும்பி வந்து பாதணிகளை எடுத்துக் கொள்வேன்.
அந்த பழக்கத்தில் தான் இங்கும் இப்படி நடந்து கொண்டேன். பாதணிகளை எடுத்து ஆலயத்தின் வேலியோரமாக போட்ட ஆலயத்தினர் அதனை பக்தர்கள் வரும்போது சொல்லி உதவியிருக்கலாம்.” என ஆலயத்திற்கு வந்திருந்த ஒருவர் ஆதங்கப்பட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.
அத்துடன் பாதணிகளைத் தேடும் ஏனையோருக்கும் விடயத்தை சொல்லி தேடியலையும் நிலையை தவிர்க்க உதவியதையும் அவதானிக்க முடிந்ததாக கூறப்படுகிறது.
நண்பகலை அண்மித்த நேரத்திலும் இராஜகோபுரத்தின் மின் விளக்குகளை அணைக்காது விட்டிருக்கின்றனர்.
இராஜகோபுரத்தின் இரவு நேர காட்சிப்படுத்தலுக்கான மின்விளக்குகளே இவையாகும். சுமார் 27 மின்விளக்குகள் ஒளிர்ந்த வண்ணம் இருந்தது என சிவபக்தர் ஒருவர் கூறியுள்ளார்.
மின்கட்டண உயர்வு பொதுமக்களுக்கு நெருக்கடியாகின்ற இன்றைய சூழலில் நல்ல ஒளியுள்ள பகல் பொழுதில் இராஜகோபுரத்தின் விளக்குகள் ஒளிர்வதால் என்ன தான் நடந்து விடப்போகின்றது என அவர் மேலும் தன் உணர்வை வெளிப்படுத்தினார்.
இந்த செயலானது ஒட்டுசுட்டான் ஆலய நிர்வாகத்தினர் பொறுப்பற்றுச் செயற்படுகின்றனர் என்பதற்கான சான்றாகும் என அவர் கூறியுள்ளார்.
திட்டமிட்ட செயற்பாடுகள் தேவை ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் பக்தர்களாக அந்த ஆலயத்தினைச் சுற்றியுள்ள நெடுங்கேணி,குளவிசுட்டான், சமளங்குளம், பனையாண்டான், கற்சிலைமடு,முத்தையன்கட்டு,வித்தியாபுரம், சிவநகர், முள்ளியவளையை, சாலம்பன் போன்ற கிராமத்து மக்களைக் குறிப்பிடலாம்.
வருடாவருடம் திருவிழாக்கள் உள்ளிட்ட விரத கால பூசைகள் வெகு விமர்சையாக நடைபெற்று வருகின்றமையால் மக்களும் அதிகமாக வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் ஆலயத்தினர் பக்தர்களின் வழிபாட்டினை இலகுவாக்குவதற்காக பொருத்தமான ஏற்பாடுகளை செய்து அதனைப் பேண வேண்டும் என்ற தேவை உணரப்பட்டுள்ளது.
நேர்த்தியான வழிகாட்டல் கட்டளை
ஆலயத்தின் பல இடங்களில் சிசிரீவி கண்காணிப்பை பேணுகின்றனர். அது போலவே வழிகாட்டல் அறிவுறுத்தல்களை பக்தர்களுக்கு தெரிவிப்பதற்காக உரிய இடங்களில் பெயர்ப்பலகைகள் வைத்து பேணலாம் என்பது நிர்வாகவியலில் ஆளுமை மிக்க சிலரது கருத்தாக இருந்தது.
அதிக மக்கள் கூடும் இடங்களில் ஒழுங்குபடுத்தல் அவசியமாகின்றது.
அத்தகைய இடங்களில் அறிவுறுத்தல் பலகைகளே நல்ல நெறிப்படுத்துனர். இனிவரும் காலங்களில் அதிகளவான பக்தர்கள் கூடும் ஆலயங்களில் ஒழுங்குபடுத்தலுக்கான நேர்த்தியான வழிகாட்டல் கட்டளைகளை காட்சிப்படுத்துவதன் மூலம் பக்தர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை தவிர்க்க முடியும்.
இராஜகோபுரத்திற்கான சுற்று சிறுமதில். பெரும் செலவில் கட்டபபட்டு மக்களிடையே ஆன்மீகம் ஈடேற்றத்தை ஏற்படுத்துவதற்காக பேணப்படும் ஒரு கட்டுமானமே ஆலயங்களின் இராஜகோபுரங்கள். ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் சூழலமைவில் இராயகோபுரத்தின் வெளி எல்லையாக சிறியளவு நிலத்தினை சிறுமதிலால் எல்லைப்படுத்தி மணல் பரப்பில் (அல்லது புற்களை,பூச்செடிகளை வளர்த்து) அழகுபடுத்தி அதன் மீது ஒரு பார்வைக் கவர்ச்சியை ஆன்மீக அடிப்படையில் ஏற்படுத்துவதற்கு திட்டமிட்டு அதனை செயற்படுத்தி இருக்கலாம்.
மேலும், இந்த ஆலய முகப்பை அது வெகுவாக அழகாக்கியிருக்கும் என ஆர்வலர்கள் கருத்துரைத்திருந்தமையும் அவதானிக்கமுடிந்துள்ளது.

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri
