துப்பாக்கிச்சூடு சம்பவத்துடன் தொடர்புடைய நபருக்கு அதிரடிப்படையினர் மேற்கொண்ட நடவடிக்கை
தலங்கமவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஹங்வெல்லவில் விசேட அதிரடிப்படையினருடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.
சந்தேகநபர் இராணுவத்தின் முன்னாள் கொமாண்டோ என விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.
கடந்த (25.08.2023)ஆம் திகதி தலங்கம பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை தொடர்ந்து சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கையை விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்தனர்.
அதிரடிப்படையினர் பதில் தாக்குதல்
இதன் போது சந்தேகநபர் விசேட அதிரடிப்படையினர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகவும் பதில் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தலங்கம பிரதேசத்தில் வசிக்கும் 24 வயதான 'கோட்டா சுபுன்' என அடையாளம் காணப்பட்ட சந்தேகநபர் தலங்கம துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் பிரதானமானவர் என்றும் அதில் 44 வயதுடைய ஒருவர் கொல்லப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 7 மணி நேரம் முன்

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
